This Article is From Dec 31, 2018

அந்தமான் விசிட்: 3 தீவுகளுக்கு பெயர் மாற்றிய பிரதமர் மோடி!

அந்தமான் தீவுகளின் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அந்தமான் விசிட்: 3 தீவுகளுக்கு பெயர் மாற்றிய பிரதமர் மோடி!

பெயர் மாற்றும் நிகழ்ச்சியின் போது, சிறப்பு 75 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். நேதாஜியின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் மோடி உறுதியளித்தார். 

ஹைலைட்ஸ்

  • ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீப் என்றழைக்கப்படும்
  • நீல் தீவு இனி ஷாஹீத் தீப் என்றழைக்கப்படும்
  • ஹேவ்லாக் தீவு இனி சுவராஜ் தீப் என்றழைக்கப்படும்
Port Blair:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள 3 சிறிய தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அந்தமான் தீவுகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அதை நினைவு கொள்ளும் விதத்தில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ‘ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீப் என்றும், நீல் தீவு இனி ஷாஹீத் தீப் என்றும், ஹேவ்லாக் தீவு இனி சுவராஜ் தீப் என்றும் அழைக்கப்படும்' என்று பிளேயர் துறைமுகத்தில் ஆற்றிய உரையில் கூறினார் மோடி. இந்த மூன்று தீவுகளுக்கு, அந்தமானில் சுற்றலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

e1okke74

சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நேதாஜி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு, ஷாஹித் மற்றும் சுவராஜ் தீப் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இரண்டாம் உலகப் போர் உச்சத்திலிருந்த போது, ஜப்பானியர்கள் இந்தத் தீவை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு ஜப்பானுடன் கூட்டு வைத்து நேதாஜி தீவுகளுக்கு வந்தார். 

பெயர் மாற்றும் நிகழ்ச்சியின் போது, சிறப்பு 75 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். நேதாஜியின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் மோடி உறுதியளித்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னர், அந்தமான் தீவுகளின் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

.