हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 16, 2019

‘நானும் காவலாளிதான்!’- லோக்சபா பிரசார வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

ஏழு கட்டங்களா நடக்க உள்ள 2019 லோக்சபா தேர்தல், ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பமாகிறது. 

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேசிய தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நானும் காவலாளிதான்' என்கின்ற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார். 

தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி, ‘உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கிறார். ஆனால், நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழலை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ அவர்கள் எல்லாம் காவலாளிகள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று அனைத்து இந்தியர்களும் ‘நானும் காவலாளிதான் என்று கூறுகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணொளி பாடலில் வரும் வரிகள், பிரதமர் மோடி தொடங்கிய பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறுகின்றன. அதில் முத்ரா யோஜனா, உஜ்வாலா யோஜனா, க்ளீன் இந்தியா திட்டம் உள்ளிட்டவையும் அடங்கும். 

Advertisement

வீடியோ முடிவில் மார்ச் 31 ஆம் தேதி நடக்க உள்ள, ‘நானும் காவலாளிதான்' என்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி சொல்லுமாறு முடிவடைகிறது. 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து பிரதமர் மோடியை, ‘காவலாளி ஒரு திருடன்' என்று விமர்சித்து வருகிறார். ரஃபேல் ஒப்பந்தத்தில், அனில் அம்பானிக்குச் சாதகமாக மோடி நடந்து கொண்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அம்பானிக்கு விட்டுக் கொடுத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் ராகுல். 

Advertisement

‘5 ஆண்டுகளுக்கு முன்னர் காவலாளி சொன்னார், ‘நான் ஊழலுக்கு எதிராகப் போராடப் போகிறேன்' என்று. அவர் காங்கிரஸ் இல்லாத இந்தியா மலர வேண்டும் என்றார். ஆனால், இன்று ‘நல்ல நாள் வரப் போகிறது' என்கிற கோஷம் மாறி ‘காவலாளி ஒரு திருடன்' என்பதாக உள்ளது' என்று ராகுல் காந்தி சமீபத்தில்தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசினார். 

2014 ஆம் ஆண்டு பாஜக, ‘நல்ல நாள் வரப் போகிறது' என்கின்ற தேர்தல் கோஷத்தை முன்வைத்தது. அந்தத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 

Advertisement

ஏழு கட்டங்களா நடக்க உள்ள 2019 லோக்சபா தேர்தல், ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பமாகிறது. 

 

Advertisement