Read in English বাংলায় পড়ুন हिंदी में पढ़ें
This Article is From Mar 22, 2019

‘இந்தியர்கள் உங்களை மன்னிக்கமாட்டார்கள்!’- பாலகோட் குறித்து காங்கிரஸ் கேள்விக்கு கொதித்த பிரதமர்

எதிர்கட்சிகள் நமது ராணுவப் படையை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தி வருகின்றன- பிரதமர் மோடி

Advertisement
இந்தியா
New Delhi:

காங்கிரஸ் தரப்பு, சமீபத்தில் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து கேள்வியெழுப்பியிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். 

ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா, பாலகோட் தாக்குதலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் தலைவரின் ஆலோசகர் பாகிஸ்தான் தேசிய நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்திய ராணுவப் படைகளை அவமானப்படுத்தி அவர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.

எதிர்கட்சிகள் நமது ராணுவப் படையை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தி வருகின்றன. நான் என் சக இந்திய குடிமக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், எதிர்கட்சித் தலைவர்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். 130 கோடி இந்தியர்கள், எதிர்கட்சிகளின் இந்த தரம் தாழ்ந்த கருத்துகளுக்கு மன்னிக்கப்பட மாட்டார்கள்' என்று ட்விட்டர் மூலம் கருத்திட்டுள்ளார்.

Advertisement

முன்னதாக பிட்ரோடா, ‘பாலகோட் தாக்குதல் குறித்து நான் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் எதன் மீது தாக்குதல் நடத்தினோம். நாம் உண்மையிலேயே 300 தீவிரவாதிகளைக் கொன்றோமா? அந்த சம்பவம் குறித்து இன்னும் நிறைய தரவுகளும் தகவல்களும் அளிக்கப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார். 

புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாத தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம் மீது குண்டு போட்டு தாக்கியது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Advertisement
Advertisement