சீனா உடனான மோதலை தொடர்ந்து, லாடக்கில் பிரதமர் மோடி ஆய்வு! (புகைப்படங்கள்)
New Delhi: இந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லே பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தற்போது, ‘நிமுவில் முன்னோக்கி உள்ள இடத்தில்' உள்ளார். இன்று அதிகாலையில் அவர் அங்கு சென்றடைந்தார். அங்கு அவர் ராணுவ அதிகாரிகள், இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு காவலர்களுடன் உரையாற்றுகிறார். 11,000அடி உயரத்தில் உள்ள இந்த பகுதி கடினமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தலைவர் எம்.எம்.நரவனே ஆகியோருடன் ஒரு கூடாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
லடாக் எல்லை பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லே பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணுவம், விமானப்படை, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.