This Article is From Sep 17, 2018

பிரதமர் மோடி, அவரது 68வது பிறந்தநாளை இப்படித்தான் கொண்டாடப் போகிறார்!

பாபாத்பூர் - சிவ்பூர் சாலை விரிவாக்கத் திட்டம், ரிங் சாலை ஃபேஸ்-1 திட்டம், ஆகியவை இதில் அடங்கும்

பிரதமர் மோடி, அவரது 68வது பிறந்தநாளை இப்படித்தான் கொண்டாடப் போகிறார்!

மோடி, சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது தனது தாயை சென்று சந்தித்தார்

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, அவரது 68வது பிறந்த நாளை இன்று வாரணாசியில் கொண்டாட உள்ளார். அவர், அங்கு இரண்டு நாள் இருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 

வாரணாசியில் மோடி இன்று தரையிறங்கிய உடன் நரூர் கிராமத்துக்குச் செல்ல உள்ளார். அங்கு அவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவார். இதையடுத்து அவர் காசி வித்யாபீத் மாணவர்களுடன் கலந்து பேச உள்ளார். 

இரண்டாவது நாளான நாளை, மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்க உள்ளார். இதில் புராணி காசியின் ஐபிடிஎஸ் திட்டமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அடல் இன்குபேஷன் திட்டமும் அடங்கும். 

இது மட்டுமல்லாமல், பல உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபாத்பூர் - சிவ்பூர் சாலை விரிவாக்கத் திட்டம், ரிங் சாலை ஃபேஸ்-1 திட்டம், ஆகியவை இதில் அடங்கும். பின்னர் அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார். 

பிரதமர் பிறந்த நாளுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘நாட்டை முன்னேற்றப் பாதையில் கட்டமைக்க மிகத் தீவிரமாக உழைக்கும் பிரதமர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘மிகக் கணிவான மனிதரான பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் வாய்த்திட வேண்டும். நாட்டுக்கு அவர் தொடர்ந்து சேவையாற்றிட வேண்டும். இந்த தேசத்தை முன்னேற்றப் பாதையில் அவர் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

.