Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 31, 2018

சுதந்திர தேவியின் சிலையை விட இரு மடங்கு உயரமானது படேல் சிலை: டாப் தகவல்கள்!

597 அடி அல்லது 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலைதான், உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும்

Advertisement
இந்தியா

சிலையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட வெண்கலப் பேனல்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

New Delhi:

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை மோடி, படேலின் 143 வது பிறந்தநாளான இன்று நாட்டுக்கு அற்பணிப்பார் என்று தெரிகிறது.  

டாப் தகவல்கள்:

  1. 597 அடி அல்லது 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலைதான், உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும். 
  2. சீனாவின் ஸ்பிரிங் புத்தர் சிலை தான், தற்போது வரை உலகின் மிக உயரமான சிலையாக திகழ்ந்து வருகிறது. அதைவிட, படேல் சிலை 177 அடி உயரமானதாக இருக்கும்.
  3. அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவி சிலையை விட, படேல் சிலை இரண்டு மடங்கு உயரமானது ஆகும்.
  4. இந்த சிலையை உருவாக்க 2,989 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. இந்த சிலையை பத்ம பூஷன் விருது வென்ற சிற்பி ராம் வி சுதர் வடிவமைத்துள்ளார். லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனமும் இந்த சிலையை அமைக்க உதவி செய்துள்ளன. 
  6. குஜராத்தில் இருக்கும் சர்தார் சரோவர் அணையிலிருந்து 3.32 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
  7. இரும்பால் செய்யப்பட்ட இந்த சிலைக்காக, பல நாடுகளிலிருந்து இரும்பு பெறப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல், ‘இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் ஆவார். 
  8. சிலையின் 193 வது மீட்டரில், மக்கள் பார்க்குபடி வசதி செய்து தரப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் அறையில் 200 பேர் நின்று வேடிக்கைப் பார்க்க முடியும். 
  9. சிலை திறக்கப்பட்ட உடன், ஒரு நாளைக்கு 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  10. சிலையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட வெண்கலப் பேனல்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.
Advertisement