Surat, Gujarat: குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிரதமர் நரேந்திர மோடி, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விஜய் ரூபானி ஆகியோரின் முகம் பொறிக்கப்பட்ட தங்க ராக்கி செயின்கள் விற்பனைக்கு வந்துள்ளது
சகோதரத்துவத்தை கொண்டாடும் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, புதுமையான ராக்கிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த ராக்கி செயின்கள் குஜராத்தில் அமோகமாக விற்பனையாகி வருகிறது
இந்த டிசைனில், 50 தங்க ராக்கி செயின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. இதே டிசைன் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் ஆர்டர் தருவதால், கூடுதலாக தங்க செயின்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கடை உரிமையாளர் மிலன் தெரிவித்துள்ளார்.
புதுமையான இந்த, தங்க ராக்கி செயின்கள் 50,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரையில் விற்பனைக்கு உள்ளது. ராக்கிகள் மட்டுமின்றி, தங்கத்தால் செய்யப்பட்ட ராக்கி லட்டு சூரத் நகரில் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.