ஹைலைட்ஸ்
- தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்கிறார் தினகரன்
- தமிழக நலனை பாதுகாக்கும் பிரதமரை தேர்வு செய்யுங்கள்: டிடிவி தினகரன்
- ''அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்''
மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று டிடிவி தினகரன் பேசியதாவது-
தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மக்கள் விரும்பாத கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க உள்ளது. இதனால் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்.
புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தமிழத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கிறது. தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எங்கு சென்றாலும் எப்போது இந்த அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.