हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 14, 2019

சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது: பிரதமர் மோடி கடும் கண்டனம்!

தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

350 கிலோ எடைகொண்ட வெடி பொருட்கள் கொண்ட ஸ்கார்பியோ காரின் மூலம் மோதியுள்ளனர்.

New Delhi:

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும். சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜைஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

முதல்கட்ட தகவலின்படி, புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் சென்று கொண்டிருந்த துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது காரை கொண்டு மோதி அதிலிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அதில் அகமது என்பவர், ஸ்கார்பியோ காரில் 350 கிலோ எடைகொண்ட வெடி பொருட்களை நிரப்பியுள்ளார். பின்னர் ரிசர்ப் போலீசார் சென்ற பஸ் மீது வேகமாக மோதி பஸ்ஸை வெடிக்கச் செய்துள்ளார்.

அந்த பேருந்துக்குள் சுமார் 40 ரிசர்வ் போலீசார் இருந்தனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை முதலில் 18-ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 40 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளர். மேலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும். சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisement
Advertisement