குறும்புச் சிரிப்பில் இளவரசர் ஹாரி
இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு அறக்கட்டளை நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியை இளவரசர் ஹாரியின் (Prince Harry) மனைவி மேகன் மார்க்கெல் நடத்தினார். நிகழ்ச்சியின்போது வந்திருந்த விருந்தினர்களுக்கு சுவையான பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சி முடிந்தபோது, அங்கிருந்து சமோசா அடங்கிய தட்டு ஒன்றை, அசட்டுச் சிரிப்புடன் இளவரசர் ஹாரி மறைத்துக் கொண்டு செல்கிறார்.
இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்ஃபோனில் படம் பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பல லட்சம் ஷேர்களை கடந்துள்ளது. இதன் மூலம், இந்திய பலகாரமான சமோசா சர்வதேச புகழை பெற்றுள்ளது.