Read in English
This Article is From Jan 18, 2019

பிரிட்டன் இளவரசர் பிலிப் சென்ற கார் விபத்துக்குள்ளானது

இளவரசருடன் மேலும் 2 பேர் காரில் பயணம் செய்துள்ளனர். அவர்களுக்கு லேசான காயம் எற்பட்டதாகவும், மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
உலகம்

மெய்ன் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது

London:

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், பிரிட்டன் இளவரசருமான பிலிப் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். கிழக்கு இங்கிலாந்தின் சாண்ட்ரிகாம் எஸ்டேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

காரில் சென்ற இளவரசருடன் மேலும் 2 பேர் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளவரசரின் லேண்ட் ரோயர் கார் சாலையோரத்தில் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் இங்கிலாந்துக்கு வந்திருந்தனர். அப்போது இருவரையும் காரில் வைத்து இளவரசர் பிலில் காரை டிரைவ் செய்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement