This Article is From Oct 09, 2018

சோட்டு ராமின் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஹரியானாவில், சோட்டு ராமின் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில் பெட்டி தொழிற்சாலையையும் திறந்து வைத்தார்.

சோட்டு ராமின் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

5,500 விவசாயிகளின் பங்களிப்பை சோட்டு ராமின் 64 அடி உயர சிலை பெற்றுள்ளது.

Rohtak:

ஹரியானா மாநிலம், சம்ப்லா கிராமத்தில், தீன்பந்து சோட்டு ராமின் 64 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ஆங்கிலோர் ஆட்சிக்காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடியவரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவர் தீன்பந்து சோட்டு ராம் ஆவார்.
 

3qkq3h1

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சோட்டு ராமின் போராட்டமும், உழைப்பும் இந்த மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இன்றும் ஊக்க சக்தியாக இருக்கிறது என்றார்.

மேலும், விவசாயத்துறைக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளுக்காக வங்கிகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 66.50 லட்சம் மக்கள் ஜன் தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கியுள்ளனர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைத்து வருகிறது. நவீன வகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்து வருகிறது. விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது என்றார்.

.