கைதி நபீர் முதுகின் இடதுபுறம் ’ஓம்’ முத்திரை பதிக்கப்பட்டதாக காட்டினார்.
New Delhi: டெல்லி திஹார் சிறையிலுள்ள இஸ்லாமிய சிறைக் கைதி ஒருவர், சிறை கண்காணிப்பாளர் தன்னை கடுமையாக தாக்கி துன்புறுத்துவதாகவும், தனது முதுகில் 'ஓம்' முத்திரையை குத்திவிட்டதாகவும் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
கைதி நபீர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதிகள் முன்பு நபீர் தனது சட்டையை கழட்டி அதிகாரிகள் தனது முதுகில் 'ஓம்' முத்திரையை பதித்ததை காட்டினார்,
இந்த குற்றச்சாட்டை சிறை கண்காணிப்பாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விளக்கமளித்த அவர்கள் வலுக்கட்டாயமாக முத்திரையை பதித்திருந்தால், அது இவ்வளவு துல்லியமாக வந்திருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலம், தேவைப்பட்டால் சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்யவும், மற்ற கைதிகளிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியின் சீலம்பூரி பகுதியை சேர்ந்தவர் நபீர். இவர் ஆயுதங்கள் விற்றக் குற்றத்திற்காக விசாரணை கைதியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயர் ஆபத்து நிறைந்த சிறை எண் 4 வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
(With Inputs From ANI)