This Article is From May 27, 2020

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

அதேபோல், பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Advertisement
தமிழ்நாடு Edited by

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகமெங்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து கட்டங்களாக ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 

தற்போதைய நிலவரப்படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. 

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 

Advertisement

அதேபோல், பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து குழு தரும் அறிக்கையை வைத்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Advertisement
Advertisement