This Article is From Jun 25, 2020

“விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது“: இஸ்ரோ சிவன்

“தனியார் விண்வெளி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குதல் போன்ற விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் துறை இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது

New Delhi:

விண்வெளிச் செயல்பாடுகளில் தனியார்த்துறை பங்கேற்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், விண்வெளியில் தனியார்த்துறையின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது எனதற்போது கூறியுள்ளார்.

“ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை உருவாக்குதல் மற்றும் ஏவுதள சேவைகளை வழங்குதல் போன்ற விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் துறைக்கு இப்போது அனுமதி வழங்கப்படும்“ என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் இன்று தெரிவித்தார்.

மேலும், “தனியார் விண்வெளி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரோவின் நடவடிக்கைகள் குறைக்கப் போவதில்லை என்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கிரகங்களுக்கு இடையிலான மற்றும் மனித விண்வெளி விமானப் பணிகள் உள்ளிட்ட நமது விண்வெளி அடிப்படையிலான நடவடிக்கைகளை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் டாக்டர் சிவன் கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.