This Article is From Feb 09, 2019

மீண்டும் வைரலாகும் பிரியா வாரியர்

கடந்த ஆண்டு பிரியா பிரகாஷ் வாரியர் செய்த சின்ன கண் சிமிட்டல் இணைய உலகில் பல வகையிலும் வைரலானது.

மீண்டும் வைரலாகும் பிரியா வாரியர்

டீசரில் வரும் காட்சியில் பிரியா வாரியர் மற்றும் ரோஷன் அப்துல் ரஃவ்

ஹைலைட்ஸ்

  • ஒரு அடார் லவ் காதலர் தினத்தில் வெளியாகிறது.
  • இந்தப் படத்தில் ஸ்னேக் பீக் வெளியாகியுள்ளது.
  • இந்த முத்தக் காட்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்
New Delhi:

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒற்றைக் கண்சிமிட்டலில்  இந்தியாவெங்கும் வைரலாக பேசப்பட்டார். இவர் நடித்து பிப்ரவரி 14 அன்று ‘ஒரு அடார் லவ்' திரைப்படம்  வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கான ஸ்னேக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. பிரியா வாரியர் உடன்  நடிக்கும் ரோஷன் அப்துல் ரஃவ் கொடுக்கும் முத்தத்தை பெறுவதைப் போல ஒரு காட்சி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. 

 

பலர் “இது மாணவர்களை தவறாக வழிநடத்துகிறது” என்றும் பலர் “இது செக்ஸுவல் கண்டெண்ட் என்றும் இதை தடை செய்ய வேண்டும்” என்றும்  கமெண்ட் செய்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு பிரியா பிரகாஷ் வாரியர் செய்த சின்ன கண் சிமிட்டல் இணைய உலகில் பல வகையிலும் வைரலானது. கண் சிமிட்டல் குறித்தான   விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கினார். பிரியா வாரியரின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் 8லட்சம் பேர் ஃபாலோயர்களாக மாறினர்.  ஒரே இரவில் பிரியா வாரியரின் கணக்கு செலிபிரிட்டிக்கான அந்தஸ்த்தைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயராக பிரியா வாரியர் இடம் பிடித்தார்.  

பிரியா வாரியர் நடித்த ஒரு ஆடார் லவ் மற்றும் இந்தி படமான ‘குல்லி பாய்' படம் இரண்டும் பிப்ரவரி 14இல் வெளிவரவுள்ளது. 

.