குடும்ப அரசியல் செய்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
Chennai: காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு அவர் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை விமர்சித்துள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''பிரியங்கா காந்திக்கு பொறுப்பு அளித்ததன் மூலம் குடும்ப அரசியலை முன்னோக்கி நகர்த்தியுள்ளது'' என்று காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ''காங்கிரஸ் கட்சியில் திறமை மிக்கவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொறுப்புகள் வழங்காமல் பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் 1-ம்தேதி முதல் பிரியங்கா காந்தி தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.