பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் தங்கள் குடும்பத்துடன். Image courtesy: Instagram)
New Delhi: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் பாடகர் நிக் ஜோனஸ்க்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண தம்பதிகள் இருவரும் டிசைனர் ரால்ப் லாரான் மற்றும் ஸபையாஸ்சி முகர்ஜி வடிவமைத்த உடைகளை அணிந்திருந்தனர். டிசைனர்களுக்கு நன்றி தெரிவித்து பிரியங்கா சோப்ரா தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோன்ஸும் இரண்டு மத அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர். கிறித்துவ மத முறையில் நடந்த புகைப்படத்தையும், இந்து மத முறையில் நடந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா இன்ஸ்டா இவர்களால்தான் நாங்கள்… இது தான் என் குடும்பம்… நாங்கள் அனைவரும். நாங்கள் அனைவரும் அணிந்திருக்கும் உடைகளுக்காக ரால்ஃப் லாரனுக்கு நன்றி. அழகான நகையை வடிவமைத்தவர் சோஃபர்டு. இந்தியன் லெஹகன்ஹாவை உருவாக்கிய ஸபையாஸ்சிக்கு நன்றி. திருமண நிகழ்வுகளை மறக்க முடியாத வண்ணம் வடிவமைத்து கொடுத்த அபு ஜனி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோருக்கு நன்றி என்று கூறியிருந்தார்.
பிரியங்கா மற்றும் நிக் இருவரும் கிறித்துவ சடங்குகளின் படி டிசம்பர் 1 திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் ஜோத்பூர் உமைட் பவன் அரண்மனையில் நடந்து முடிந்தது.
டிசம்பர் 2 அன்று இந்து மத சடங்குகளின் படி திருமணம் நடந்து முடிந்தது.
கடந்த வியாழன் அன்று மேலும் பல அழகான புகைப்படங்களை வெளியிட்டனர்.
திருமணம் முடிந்து பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸின் குடும்ப பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.
பிரியங்கா நிக் இருவரும் மும்பையில் இருக்கின்றனர். வியாழன் காலை இருவரும் டெல்லி வந்தடைந்தனர். அங்கு ரிஸப்ஸன் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.