திருமணச் சடங்கின் போது பிரியங்கா சோப்ரா மற்றும் நீக் ஜோனாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
ஹைலைட்ஸ்
- சங்கீத்துக்கு பிரியங்காவின் திரைப்பட பாடல்களுக்கு நிக் ஜோனாஸ் நடனம்
- நிக் மற்றும் பிரியங்காவின் திருமணம் ஜோத்பூரில் நடக்க உள்ளது
- கிறித்துவ மத படியும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது
New Delhi: பாலிவுட் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்தை உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நடிகை பிரியங்கா மற்றும் பாடகர் நீக் ஜோனாஸின் திருமண கொண்டாட்டங்கள் இம்மாத இறுதிக்குள் தொடங்கி டிசம்பர் 2 வரை ஜோத்பூரில் உள்ள உமேத் பவன் மாளிகையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்து மற்றும் கிறித்துவம் என இரு மத முறைகளிளும் திருமணம் நடக்கவுள்ள நிலையில், கிறித்துதுவ முறை திருமணத்திற்க்கு மற்ற மணப்பெண்கள் அணியும் வெள்ளை கவுன்களுக்கு மாற்றாக சிவப்பு நிற கவுனை பிரியங்கா அணியப்போவதாகவும், மணப்பெண் தோழிகளுக்கு பிரபல ஆடை வடிமைப்பாளரான ரால்ஃவ் லாரன் பிரத்யேக உடையை வடிவமைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆடை வடிவமைப்பாளர் ஏகா லாஹானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மாக்ரோன்களின் புகைப்படம்.
ஃவார்ஹான் அக்தரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மாக்ரோன்களின் புகைப்படம்.
இந்நிலையில் பிரிங்காவின் ‘சங்கீத்' என்னும் வட இந்திய திருமணச்சடங்கை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. பிரியங்காவின் சங்கீத் விழாவுக்கு நடன இயக்குனர் கனேஷ் ஹெட்ஜி நடன பயிற்சி தரவுள்ளதாகவும், விழாவில் பிரியங்கா சோப்ராவின் திரைப்பட பாடல்களுக்கே நடனமாடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட இந்திய திருமண வழக்கப்படி லட்டுக்கள் மட்டுமே திருமண அழைப்பிதழ்களுடன் கொடுக்கப்படும், இந்நிலையில் பிரியங்கா அதை ‘மாக்ரோன்ஸ்' ஆக மாற்றி அசத்தியிள்ளார்.
இந்த மாக்ரோன்ஸ்ஸை அவர் தற்பொழுது நடித்து வரும் ‘ தீ ஸ்கைய் இஸ் பிங்க்' திரைப்பட தளத்திற்க்கு எடுத்துச் சென்றார். அங்கு தன்னுடன் நடிக்கு ஃவார்ஹான் அக்தர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஏகா லாஹானிவுடன் பகிர்ந்தார்.
பிரியங்கா சோப்ரா பரிசளித்த மாக்ரோன்களை ஆடை வடிவமைப்பாளர் ஏகா லாஹானி மற்றும் நடிகர் ஃவார்ஹான் அக்தர் ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.