This Article is From Jun 10, 2018

குவாண்டிகோவின் சமீபத்திய பகுதிக்கு, ப்ரியங்கா சோப்ரா "மன்னிப்பு" கோரியுள்ளார்

சமூக வலைத்தளத்தில் ப்ரியங்கா சோப்ராவிற்கு எதிராக குவியும் தாக்குதலுக்கு, ஏபிசி நிறுவனம் கண்டனம் விதித்துள்ளது

குவாண்டிகோவின் சமீபத்திய பகுதிக்கு, ப்ரியங்கா சோப்ரா

ஹைலைட்ஸ்

  • நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்றார் ப்ரியங்கா சோப்ரா
  • நியாயமற்ற முறையில் இந்திய நடிகை தாக்கப்பட்டுள்ளார்
  • சிலரது உணர்ச்சிகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
New Delhi: புதுடில்லி: அமெரிக்க தொலைக்காட்சி நாடகமான குவாண்டிகோவில், பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரியாக நடித்து வரும் ப்ரியங்கா சோப்ரா, சமீபத்திய பகுதியில், அமெரிக்கவில் ஏற்படும் குண்டு வெடிப்பு திட்டத்தினை இந்தியர்கள் குறிவைத்து, பின்னர் பாகிஸ்தானியர் மீது குற்றம் சுமத்துவதாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ரசிகர்களின் உணர்ச்சிகளையும் காயப்படுத்திவிட்டதாக கூறி ப்ரியங்கா சோப்ரா மீது சமூக வலைத்தளங்களில் தாக்குதல் உள்ளாகின.

குவாண்டிகோ நாடகத்தை தயாரிக்கும் ஏபிசி நிறுவனமும், “கதைக்கள உருவாக்கத்திற்கு, நியாயமற்ற முறையில் இந்திய நடிகை தாக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ப்ரியங்கா சோப்ரா கூறியதாவது, குவாண்டிகோவின் சமீபத்திய பகுதியில் தோன்றிய காட்சிகளினால் சிலரது உணர்ச்சிகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன், அதை என்றைக்கும் மாறாதது” என தெரிவித்தார்.

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க நடிகை பமேலா ஆண்டர்சன் நடித்துள்ள தொலைக்காட்சி நாடகத்தை மையமாக கொண்டு, 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் பேவாட்ச்சில் நடித்துள்ளார்.  சமூக வலைத்தளத்தில் ப்ரியங்கா சோப்ராவிற்கு எதிராக குவியும் தாக்குதலுக்கு, ஏபிசி நிறுவனம் கண்டனம் விதித்துள்ளது. 

 
priyanka chopra quantico

“குவாண்டிகோ நாடகத்தின் குறிப்பிட்ட பகுதியில், இந்து தீவிரவாத சதி குறித்த பகுதி இந்தியர்கள் மத்தியில் பல உணர்ச்சிகளை கிளப்பியுள்ளது. குவாண்டிகோ நாடக பகுதியினை ப்ரியங்கா சோப்ரா எழுதவோ, உருவாக்கவோ இல்லை என ஏபிசி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு ஏபிசி நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது” என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

எனினும், ப்ரியங்கா சோப்ரா மீதான தாக்குதல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து உள்ளது.

“மேற்கு நாட்டவரின் முடிவிற்கு ஏற்ப ப்ரியங்கா சோப்ரா தனது நாடு மற்றும் நாட்டு மக்களின் உணர்ச்சிகளை காயமடைய செய்ய எப்படி ஒப்பு கொண்டார்?” என்று ட்விட்டரில் சோப்தசாப் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  “இந்திய ரசிகர்களை அவமதித்து எந்த புகழும் உங்களுக்கு கிடைக்க பேவதில்லை” என சவுரவ் சுக்லா என்றவர் ட்விட் செய்திருந்தார்.

இந்திய ரசிகர்களின் தாக்குதலுக்கு மத்தியிலும், ப்ரியங்கா சோப்ராவிற்கு அதரவு குவிந்துள்ளது. “கற்பனை கதையில் நடித்ததற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என ஜோஸ்பின் கதாப் ட்விட்டரில் கூறியுள்ளார். “நடிப்பதற்கு ஒரு நடிகை மன்னிப்பு கேட்பது வருத்தமளிக்கிறது” என தேவேஷ் பகேடி கூறியுள்ளார்.  கற்பனை கதையில் உருவான நாடகத்திற்கு எதற்கு நடிகை மன்னிப்பு கேட்க வேண்டும், அது அவரது உண்மை நிலைப்பாடு இல்லை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 
.