New Delhi: புதுதில்லி: 18 வருடங்களுக்கு முன்னர் மிஸ் இந்தியா மற்றும் உலக அழகி பட்டத்தை வென்ற பின், பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையில் மாற்றம் வந்தது. இருப்பினும், பிரியங்காவை இந்திய அழகியாக தேர்வு செய்வது பற்றிய விவாதம் எழும்போது, அவரது நிறம் கொஞ்சம் கருப்பை ஒத்தது போல் இருப்பதாக ஒரு நடுவர் கூறினார் என்று , பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உருவாகி வரும், பிரியங்கா சோப்ராவின் சுயசரிதையில், 2000-ம் ஆண்டு, மிஸ் இந்தியா போட்டியின் ஆலோசகர்களில் ஒருவரான பிரதீப் குஹா, "ஜூரிகளில் எல்லோரும் முதலில் பிரியங்காவுக்கு ஆதரவாக இல்லை. ஒருவர் அவரது நிறம் கொஞ்சம் கருப்பை ஒத்தது போல் இருப்பதாக கூறினார். அதற்கு நான் 'தென் அமெரிக்கப் பெண்களைப் பாருங்கள். ஆபிரிக்காவிலிருந்து வந்த பெண்கள் வெற்றியடைகின்றனர், சிலர் கருப்பாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். அதனால் நிறம் ஒரு விஷயம் அல்ல' என்று நான் பேசினேன்" என்கிறார்.
மேலும் பேசிய பிரதீப் குஹா, "பிரியங்கா சோப்ரா மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவருக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை தேவை என்று நான் நினைக்கிறேன். இதைதான் செய்ய வேண்டும் என்று அவர் ஆரம்பத்தில் மிகவும் உறுதியாக இல்லை என்று நினைக்கிறேன். அவர் தீடிரென வந்தார். போட்டி தொடங்கிய நேரத்தில் அதிக நம்பிக்கையுடையவராக காட்சியளித்தார். தன்னை ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொண்டார்"என்று அவர் கூறியதாக பி.டி.ஐ யின் அறிக்கை கூறுயிருந்தது.
2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றார், பிரியங்கா இரண்டாம் இடமும், தியா மிர்ஸா மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றனர். உண்மையில், லாரா தத்தா மற்றும் பிரியங்கா சோப்ரா இடையே ஒரு சமநிலை இருந்தது. அதே வருடத்தில், லாரா, பிரியங்கா மற்றும் தியா ஆகியோர் முறையே மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் ஆசிய பசிபிக் ஆகியவற்றில் சர்வதேச பட்டங்களை வென்றார்கள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு, லாரா தத்தா மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் அன்டாஸில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்தனர். பேவாட்ச் படத்தில் டிவைன் ஜான்ஸனுக்கு எதிரியான கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்தார். தற்போது அவர் தி ஸ்கை இஸ் பிங்க் படத்தில் நடித்து வருகிறார், அதன்பிறகு சல்மான் கான் படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்குகிறார்.