பிரியங்கா வதேரா என்பதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பினார்.
New Delhi: காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் என்பவரும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவின் தலைவரும் சுபாஷ் சோப்ராவும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுரேந்திர குமார், சோனியா ஜிந்தாபாத், காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பியவர் பிரியங்கா வதேரா என்பதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பினார். உடனடியாக தவறு சுட்டிக் காட்டப்பட்டது. இதனையடுத்து தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர் பின்னர் பிரியங்கா ஜிந்தாபாத் என்று சரியாக கூறினார்.
இச்சம்பவத்தின் காணொளி காட்சி உடனடியாக சமூக வலைதளங்களில் வைலராகியது. தொடர்ந்து ட்விட்டர் பயனாளர்கள் விதவிதமான கமெண்டுகளை கொட்டத் தொடங்கிவிட்டனர்.
“கடவுளுக்கு நன்றி...! நல்ல வேளை ராகுல் அந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ராகுல் பஜாஜ் ஜிந்தாபாத் என குரல் எழுப்பி இருப்பார் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர், “பிரியங்கா சோப்ரா எப்போது காங்கிரஸில் சேர்ந்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரியங்கா சோப்ரா ட்ரெண்ட் ஆகி வருகிறார்.