பிரிங்கா மற்றும் நிக் ஜோனாஸின் புகைப்படங்கள்!
New Delhi: இம்மாத தொடக்கத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனஸை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமேத் பவான் அரண்மனையில் கரம் பிடித்தார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா தன் திருமணமத்திற்கு பிறகு கொண்டாடும் முதல் கிருஸ்துமஸை தனது குடும்பத்தினருடன் மிக சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். இன்ஸ்டாகிராம் என்னும் புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளத்தில் தனது முதல் கிருஸ்துமஸ் புகைப்படங்களை பகிர்ந்தார்.
இதுதான் பிரியங்கா மற்றும் நிக் தம்பதியினரின் புதிய கிருஸ்துமஸ் லுக்
'லவ் யூ மை ஃபேமிலி' என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா தனது தாயார்( மது சோப்ரா), கணவர் நிக் ஜோனஸ் மற்றும் நிக்கின் அண்ணன் ஜோய் உடன் இருந்தனர். மும்பையில் நடந்த தனது திருமண வரவேற்பை தொடர்ந்து கடந்த வாரம் லண்டன் சென்றார் பிரியங்கா நிக் ஜோனஸ் தம்பதியினர்.
பிரியங்காவின் ரசிகர்கள், அவரின் கிறிஸ்துமஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 2018 ஆம் ஆண்டின் மிகவும் ஸ்டைலீஷ் ஆன நபர் என்ற விருதை ஜி.குயூ நிறுவனம் வழங்கியது.
திருமணத்திற்கு பிறகு நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ரா தம்பதியினர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ல் நகரில் மேலும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது என்பது கூடுதல் தகவல்.