அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கணவர் ராபர்ட் வத்ராவுடன் பிரியங்கா காந்தி வத்ராவும் வருகை தந்தார்.
New Delhi: பணமோசடி வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் வந்த கணவர் ராபர்ட் வத்ராவுடன், பிரியங்கா காந்தி வத்ராவும் வருகை தந்தார். அமலாக்கத் துறை விசாரணைக்கு கணவர் ராபர்ட் வத்ரா சென்ற பிறகு, பிரியங்கா காந்தி என்டிடிவி-யிடம், என் கணவரோடு துணை நிற்பேன் என்று கருத்து தெரிவித்தார்.
பண மோசடி வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆஜராகியுள்ளார். இவருடன், அமலாக்கத்துறை அலுவலகம் வரை, பிரியங்கா காந்தி வந்திருந்தார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், வதோராவுக்கு அந்த சொத்துகள் எப்படி வந்தது என்பதை மட்டும் எங்களிடம் விளக்கம் வேண்டும் என அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரத்தில் ராபர்ட் வதேரா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வரும் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட்
வதேரா கலந்து கொள்வார். அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
இந்நிலையில், வாக்குறுதியின்படி ராபர்ட் வதேரா தனது வழக்கறிஞருடன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.