பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் பிரசாந்த்.
ஹைலைட்ஸ்
- தாயார் சோனியாவின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம்
- உ.பி. கிழக்கு பகுதியில் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமனம்
- பிரியங்கா காந்தியின் நியமனம் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது
New Delhi: உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும், தேர்தல் பிரசார வல்லுனருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
அரசியலில் முழுவதுமாக இறங்கி விட்டால் பிரியங்கா காந்தியால் உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கூறியுள்ளார்.
என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது-
அரசியலில் முழுவதுமாக இறங்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியை நம்மால் ஒப்பிட முடியாது. ஏனென்றால் ராகுல் காந்தி ஏற்கனவே 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்திருக்கிறார்.
முன்பு பிரியங்கா காந்தி அரசியலில் இல்லாமல் இருந்தாலும், காங்கிரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தன்னால் முயன்ற உதவிகளை பிரியங்கா செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். 2014 மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக பிரசாந்த் கிஷோர் இருந்தார். இந்த தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.