Read in English
This Article is From Nov 01, 2019

படேலின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி: பிரியங்கா காந்தி

சர்தார் படேல் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க காங்கிரஸ் தலைவர். காங்கிரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர் என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

சர்தார் படேல் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க காங்கிரஸ் தலைவர் - பிரியங்கா.

New Delhi:

படேலின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளை இன்று தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட படேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை அமைதியின் சின்னம் எனக் குறிப்பிட்டார். இந்தியா பன்முகத் தன்மையால் நிரம்பியிருப்பதாகவும் ஆனால் நாம் வேற்றுமையில் ஒற்றுமையை  வெளிப்படுத்துவதாகவும் கூறிய மோடி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையை கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதற்கு வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே  காரணம் என்று கூறிய அவர், 133 கோடி இந்தியர்களும் ஒற்றுமையாக இருந்து எதிரிகளை சந்திப்பதே சர்தார் வல்லபாய் படேலுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்று தெரிவித்தார்.
 

படேல் நேருவுடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிரியங்கா காந்தி .


இந்நிலையில், சர்தார் படேலின் பிறந்தநாளை கொண்டாடுவது தனக்கு மகிழ்ச்சி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்வீட்டர் பதிவில் அவர் கூறியதாவது, சர்தார் படேல் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க காங்கிரஸ் தலைவர். காங்கிரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர். அவர் நேருவுக்கு நெருக்கமானவர் என்பதுடன், ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக எதிர்த்தவர். 

Advertisement

படேலின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி என்றும் இதன் மூலம் 2 விஷயங்களை பாஜக தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்று, பாஜக-வில் சுதந்திர போராட்ட வீரர் என்று யாரும் இல்லாததால், வேறு வழியின்றி அனைத்து வகைகளிலும் காங்கிரஸ்-க்கு நெருக்கமான தொடர்புடையவரை கொண்டாடுகிறது. மற்றொன்று, படேலின் எதிரிகளை அவரிடம் அடிபணிய வைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement