This Article is From Nov 05, 2019

லண்டன் போராட்டத்தை சுட்டிக்காட்டி, பிரியங்கா காந்தி பரபரப்பான ட்வீட்!!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனை சரி செய்வது குறித்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

லண்டன் போராட்டத்தை சுட்டிக்காட்டி, பிரியங்கா காந்தி பரபரப்பான ட்வீட்!!

டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் அரசுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

New Delhi:

டெல்லி காற்று மாசுடன் லண்டன் போராட்டத்தை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி பரபரப்பான ட்வீட்டை வெளியிட்டிருக்கிறார். 

டெல்லியில் ஏற்பட்டிருக்கு காற்று மாசுபாடு நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதில் அரியானா, பஞ்சாப் மாநிலங்கள்தான் காரணம் என்று டெல்லி குற்றம் சாட்டியுள்ளது. இதனை இரு மாநிலங்களும் மறுத்து வருகின்றன. இவ்வாறு ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் சூழலில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்துள்ளனர். 

இந்த நிலையில், லண்டன் துயரச் சம்பவத்துடன் டெல்லி காற்று மாசுபாட்டை குறிப்பிட்டு காங்கிரசின் பிரியங்கா காந்தி பரபரப்பான ட்வீட்டை வெளியிட்டுள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சீரியஸான விஷயமாகும். இதனால் நம்முடையா குழந்தைகள், வேலைக்கு செல்வோர், சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காற்று மாசுபாட்டு பிரச்னையை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். 1952-ல் லண்டனில் ஏற்பட்ட மிக மோசமான காற்று மாசுபாட்டால் 12 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்தார்கள். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லண்டன் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். இதன் விளைவாக புதிய சட்டம் இயற்றப்பட்டு மாசுபாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
 

.