This Article is From Aug 25, 2019

காஷ்மீரில் அடிப்படை உரிமைகளை மறுப்பதைக் காட்டிலும் தேசவிரோதம் இல்லை : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

அந்த ட்விட்டில் பிரியங்கா காந்தி “இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரும் லட்சக்கணக்கான மக்கள் தேசியவாதம் என்ற பெயரில் மவுனமாக்கப்பட்டு, நசுக்கப்படுகிறார்கள்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் அடிப்படை உரிமைகளை மறுப்பதைக் காட்டிலும் தேசவிரோதம் இல்லை : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

ஸ்ரீநகரிலிருந்து எதிர்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

New Delhi:

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று குற்றம் சாட்டுபவர்கள் காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதைக் காட்டிலும் அரசியல் செய்வது தேசவிரோதம் இல்லை என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டாமாகத் பதில் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் மக்களின் கருத்தை அறிய நேற்று ராகுல் காந்தி, உள்ளிட்ட 11 எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர்.

ஆனால், அவர்களை அனைவரையும் ஸ்ரீநகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்கள் அதிகாரிகளுடன் பேசிய நிலையிலும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஸ்ரீநகரிலிருந்து எதிர்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ongress's Priyanka Gandhi Vadra, whose brother Rahul Gandhi was turned away from Srinagar there is NOTHING more 'political' and 'anti national' than the shutting down of all democratic rights that is taking place in Kashmir. It is the duty of every one of us to raise our voices against it, we will not stop doing so.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ட்விட்டரின் கண்டனம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். தன்னுடைய ட்வீட்டில் வீடியோவையும் பிரியங்கா காந்தி இணைத்துள்ளார்.

அந்த வீடியோவில் விமானத்தில் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் குறித்து ஒரு பெண் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காஷ்மீரில் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அந்த பெண் பேசியுள்ளார்.

அந்த ட்விட்டில் பிரியங்கா காந்தி “இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரும் லட்சக்கணக்கான மக்கள் தேசியவாதம் என்ற பெயரில் மவுனமாக்கப்பட்டு, நசுக்கப்படுகிறார்கள்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ட்விட்டில் பிரியங்கா காந்தி கூறுகையில் “காஷ்மீர் விஷயத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று குற்றம் சாட்டுவோர், காஷ்மீரில் ஜனநாயக அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்யாமல் மறுப்பதைக் காட்டிலும் அரசியல் செய்வதும், தேச விரோதமும் இருக்காது. இந்த விஷயத்துக்கு எதிராக குரல் எழுப்புவது ஒவ்வொரின் கடமை, இதை செய்வதை நாங்கள் நிறுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

.