நமது பொதுத்துறை நிறுவனங்களை நமது பெருமை. அவைகளே நமது தங்க பறவைகள் என பிரியங்கா தெரிவித்துள்ளார்.
New Delhi: பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமை என்றும் 'அவையெல்லாம் நமது தங்க பறவைகள்,' என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட அரசால் நிர்வகித்து வரப்படும் இரண்டு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால், அடுத்த 2020 மார்ச் மாதத்திற்குள் அவை விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவை வாங்க சர்வதே முதலீட்டாளர்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. முன்னதாக முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் வராமல் போனதால் ஒரு வருடத்திற்கு முன்பே நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை விற்க முடியாமல் போனது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, நமது பொதுத்துறை நிறுவனங்களே நமது பெருமை. அவையெல்லாம் நமது தங்க பறவைகள் என்றார்.
மேலும், நாட்டை கட்டியெழுப்புவதாக உறுதியளித்திருந்தது பாஜக, ஆனால் இந்தியாவின் சிறந்த அமைப்புகளை வெற்றாக மாற்றி அவற்றை விற்க தீவிரமாக அவர்கள் செயல்படுவது பெரும் வருத்ததை அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.