This Article is From May 16, 2019

‘மோடியின் குகையில் கர்ஜித்த பிரியங்கா!’- வாரணாசியில் பிரமாண்ட பேரணி

கான்ஷி விஷ்வநாத் கோயிலில் பிரயங்கா தரிசனம் மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.

‘மோடியின் குகையில் கர்ஜித்த பிரியங்கா!’- வாரணாசியில் பிரமாண்ட பேரணி

பலர் பிரியங்காவின் பிரமாண்ட சாலைப் பேரணியை, மோடியின் பேரணியுடன் ஒப்பிட்டது குறிப்பிடத்தக்கது. 

Varanasi:

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில், பிரமாண்ட பேரணி மேற்கொண்டார் பிரியங்கா காந்தி. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் பிரியங்காவின் இந்த பிரமாண்ட பேரணி அதிக கவனம் ஈர்த்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் இதைப் போன்ற ஒரு பேரணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 26 ஆம் தேதி, வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட மோடி, வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் மோடியின் தொகுதியில் அதிக போட்டி இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த பேரணியை மேற்கொண்டுள்ளார் பிரியங்கா. அவருடன் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வாரணாசியில் களமிறக்கப்பட்டிருக்கும் அஜெய் ராய், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ராஜிவ் சுக்லா, சாவித்ரி பாய் ஃபூலே உள்ளிட்டோரும் இந்தப் பேரணியின் உடனிருந்தனர். 

பலர் பிரியங்காவின் பிரமாண்ட சாலைப் பேரணியை, மோடியின் பேரணியுடன் ஒப்பிட்டது குறிப்பிடத்தக்கது. 

மோடியின் பேரணியைப் போன்று அஸ்ஸி காட், லங்கா, கடோலியா, தஷ்வாஷமேத் காட் போன்ற இடங்களை கடந்து சென்றது. 

கான்ஷி விஷ்வநாத் கோயிலில் பிரயங்கா தரிசனம் மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்களையும் அவர் சந்தித்து உரையாடினார். அதேபோல கோட்வாலியில் இருக்கும் கால பைரவர் கோயிலுக்கும் சென்றார் பிரியங்கா. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் கிழக்கு உத்தர பிரதசே பொறுப்பாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் வாரணாசிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

.