Read in English বাংলায় পড়ুন
This Article is From Jan 23, 2019

சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவை தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என தகவல்

பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரசின் இந்த முடிவை அவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

Advertisement
இந்தியா
New Delhi:

காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்புக்கு வந்திருக்கும் பிரியங்கா காந்தி தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கிடைக்கும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அங்கு செல்வாக்கு மிக்க கட்சிகளாக இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய 2 கட்சிகளும் காங்கிரசை சேர்க்க மறுத்து விட்டன. 

காங்கிரசுக்கு தொகுதிகளை வழங்கினால் தங்களுக்கு சீட்டுகள் குறையும் என்று இரு கட்சிகளும் எண்ணுகின்றன. இந்த நிலையில் இன்று அதிரடி திருப்பமாக பிரியங்கா காந்திக்கு கட்சியில் புதிய பொறுப்பை கட்சி தலைவர் ராகுல் காந்தி அளித்தார். 

உத்தரப்பிரதேசதின் கிழக்குப் பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

இதேபோன்று உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதிக்கு ஜோதிராதித்ய சிந்தியா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கு நெருக்கமானவர்களை உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் முக்கிய பொறுப்பாளர்களை ராகுல் நியமித்துள்ளார். 

இதனால் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதிக்கு ராகுல் காந்தி மறைமுகமாக சவால் விடுத்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

Advertisement
Advertisement