டில்லி சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்று செய்தித்தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் அவர் பாஜகவுடன் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட போகிறார் என்ற தகவல்கள் பரவின.
இதைத் தொடர்ந்து ரஜினியின் செய்தித் தொடர்பாளர் அகமது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. 'பேட்ட' படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக லக்னோவுக்கு விமானத்தில் ரஜினிகாந்த் சென்றார் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அரசியல் பேச்சு வார்த்தைகளுக்காக ரஜினிகாந்த் டெல்லி செல்லவில்லை என்று அவர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.