বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 21, 2019

‘’நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதில் மல்லையாவை போன்று சிக்கல் இருக்காது’’

பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்பெற்று மோசடி செய்ததாக நிரவ் மோடி மீது புகார் உள்ளது. அவர் வரும் 29-ம்தேதி வரை லண்டன் சிறையில் இருப்பார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதில் மல்லையாவைப் போன்று சிக்கல் இருக்காது என்று விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதால் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதம் நிரவ் மோடி விவகாரத்தில் ஏற்படாது என்றும் விசாரணை அமைப்புகள் கூறியுள்ளன.

இதுகுறித்து என்.டி.டி.வி.யிடம் விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ‘சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த ஆதாரங்கள் அனைத்தும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இதனால்தான் நிரவ் மோடிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது' என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் ரூ. 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வங்கியில் பெற்று விட்டு மோசடி செய்ததாக நிரவ் மோடி மீதும் அவரது உறவினர் மெகுல் சோக்சி மீதும் புகார் உள்ளது. லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க இங்கிலாந்து நீதிமன்றம் மறுத்துள்ளது.

Advertisement

அவர் வரும் 29-ம்தேதி வரைக்கும் சிறையில் இருப்பார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி தங்கள் தரப்பு விவரங்களை எடுத்துரைப்பார்களா என்பது உறுதிபடுத்தப்படவில்லை. நிரவ் மோடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை கொண்டு வருவதில் புலனாய்வு அமைப்புகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன.

Advertisement

இந்த விவகாரத்தில் நிரவ் மோடியின் சகோதரர் நிஷால், சகோதரி புர்வி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே நிரவ் மோடியின் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. லண்டன் நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுகள் மும்பை நீதிமன்ற விசாரணையின்போது முக்கியமாக பார்க்கப்படும் என தெரிகிறது.

 

Advertisement