கண் மருத்துவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
New Delhi: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக பெங்களூரு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த கண் மருத்துவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர், தீவிரவாதிகளுக்கு உதவ மருத்துவ மற்றும் ஆயுதம் தொடர்பான செயலிகளை உருவாக்கவும், நாட்டில் அவர்களின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கு பணியாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் அப்துர் ரஹ்மான் (28), என்பவர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய கோராசன் மாகாண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய தலைநகரில் உள்ள ஜாமியா நகரில் உள்ள ஓக்லா விஹாரைச் சேர்ந்த ஜஹான்சைப் சாமி வாணி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகிய காஷ்மீர் தம்பதியினரை கைது செய்த பின்னர், கோராசன் மாகாண வழக்கு தொடர்பாக 2020 மார்ச் மாதம் டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்த குழுவான ஐஎஸ்கேபி அமைப்புடன் தொடர்பு கொண்ட அந்த தம்பதியினர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அபுதாபி உறுப்பினரான அப்துல்லா பாசித் உடன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். அப்துல்லா வேறு ஒரு தனி வழக்கில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மருத்துவர் ரஹ்மான் விசாரணையின் போது, சமி மற்றும் சிரியாவைச் சேர்ந்த பிற ஐஎஸ்ஐஎஸ் பயங்கராவாதிகளுடன் பாதுகாப்பான ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளுக்காக செயலியை உருவாக்க அவர் சதி திட்டம் செய்ததை ஒப்பக்கொண்டுள்ளார்.
காயமடைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையிலான மருத்துவ செயலியும், ஆயுதம் தொடர்பான செயலியை உருவாக்கும் செயலில் ஈடுபட்டதாக என்ஐஏ செய்திதொடர்பாளர் சோனியா நாரங் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு சிரியாவில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் மருத்துவ முகாமிற்கு சென்று அவர் சிகிச்சை அளித்துள்ளார். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து பின்னர் அவர் இந்தியா திரும்பியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)