This Article is From Jul 07, 2018

அன்னை தெரேசா தொடங்கிய தொண்டு அமைப்பில் திடுக்கிடும் சர்ச்சை

கொன்சாலியா மற்றும் அனிமா இந்த்வார் என்ற இருவரும், 1.2 லட்சம் ரூபாய்க்கு தத்தெடுக்க விரும்புவோருக்கு குழந்தைகளை விற்றதாக தெரியவந்துள்ளது

RanchI:

அன்னை தெரேசாவால் தொடங்கப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொண்டு அமைப்பின், ராஞ்சி குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றிய, இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளை விற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொன்சாலியா மற்றும் அனிமா இந்த்வார் என்ற அந்த இருவரும், 1.2 லட்சம் ரூபாய்க்கு தத்தெடுக்க விரும்புவோருக்கு குழந்தைகளை விற்றதாக தெரியவந்துள்ளது. இதுபோன்று இதுவரை 4 முறை நடந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.

“இதே போல இந்த தொண்டு அமைப்பின், அங்கீகரிக்கப்பட்ட மற்ற குழந்தைகள் காப்பகங்களிலும் நடந்திருக்லாம்” என்கிறார் காவல் துறை அதிகாரி மாலிக். இது போன்று மேலும் சில சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஞ்சியில் உள்ள இந்த கப்பகத்தில், இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னும் நடந்திருப்பதாக கூறுகிறார், 2013-ம் ஆண்டு குழந்தைகள் நல தலைவராக இருந்த ஓ.பி.சிங். 2014-ம் குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தான் விசாரிக்க சென்ற போது, அந்த காப்பகத்தின் மேலாளர் தன்னை விசாரிக்க அனுமதிக்கவில்லை என்றும், குழந்தைகள் வளர்ச்சி ஆணையத்தில் புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்கிறார் சிங்.

உள்ளூர் குழந்தைகள் நல அதிகாரிகள், காப்பகத்தில் இருந்த ஒரு குழந்தை காணாமல் போனதாக போலீஸில் புகார் அளித்த பிறகு, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்று கூறியுள்ள மாலிக், தற்போது அந்த காப்பகத்தில் இருந்த 13 பெண்களையும், 22 சிறுவர் சிறுமிகளையும் வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அன்னை தெரேசாவல் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் காப்பகங்கள் இருக்கின்றன. இப்படி ஒரு பிரபலமான தொண்டு அமைப்பில் நடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

.