This Article is From Jan 10, 2020

கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது: கொலை செய்யபடப் போவர்களின் பட்டியலும் வெளியானது

மூத்த பத்திரிகையாளரான கெளரி லங்கேஷ் செப்டம்பர் 5, 2017 அன்று பெங்களூருவில் அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது: கொலை செய்யபடப் போவர்களின் பட்டியலும் வெளியானது

இந்த வழக்கினை சிறப்பு புலனாய்வுக் துறை விசாரித்து வருகிறது. (File)

Bengaluru:

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ருஷிகேஷ் தேவ்திகர் ஜார்கண்ட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. 

கெளரி லங்கேஷைக் கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நபர் இருந்ததாகவும் இந்த வழக்கில் 18வது இடத்தில் இருப்பதாகவும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 

“அவரது வீட்டில் தடயங்கள் தேடப்பட்டு வருகிறது. நீதித்துறை முன் ஆஜர்படுத்தப்படுவார்...” என்று சிறப்பு புலனாய்வு துறை விசாரித்து வருகிறது. 

மூத்த பத்திரிகையாளரான கெளரி லங்கேஷ் செப்டம்பர் 5, 2017 அன்று பெங்களூருவில் அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். 

கொலைக் கும்பல் கொல்ல விரும்பும் நபர்களின் பட்டியலையும் தயாரித்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். இந்த பட்டியலில் நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் மற்றும் பகுத்தறிவாளர் கே.எஸ்.பகவன் ஆகியோர் அடங்குவர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் 'சனாதன் சன்ஸ்தானை' என்ற அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18பேர் இந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்று விசாரணைக்குழு கூறியது. உறுப்பினர்கள் “ஷேத்ரதர்மா சாதனா” புத்தகத்தில் உள்ள வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் பின்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும் கொலை வழக்கு தொடர்பான குற்றச்சாட்டினை சனாதன் சான்ஸ்தா அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது. 

.