சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் ரியா சக்ரவர்த்தி சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
New Delhi/ Mumbai: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று நாட்கள் விசாரித்த பின்னர் நடிகர் ரியா சக்ரவர்த்தி இன்று மும்பையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு தொடர்பாக ரியா உள்ளிட்ட பத்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ரியா சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங்-ன் முன்னாள் சமையல்காரர் தீபேஷ் சாவந்த், வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ரியா கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் உரிய செயல்முறையும் முடிவடைந்துள்ளது” என்று என்சிபி துணை இயக்குநர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா கூறினார். வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ரியா கைது செய்யப்பட்டுள்ளதாக என்சிபி தெரிவித்துள்ளது.
‘நீதியின் பரிதாபம்' என்று அழைத்த ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மணிஷிண்டே ,”போதைப் பழக்கத்திற்கு அடிமையான, பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஐந்து முன்னணி உளவியாளர்களின் பராமரிப்பில் இருந்த ஒருவரை காதலித்த குற்றத்திற்காக அரசின் மூன்று துறைகள் ஒரு பெண்ணை வேட்டையாடுகிறது.
சட்டவிரோதமாக நிர்வகிக்கப்பட்டமருந்துகளைப் பயன்படுத்தியதால் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண் டார்” என்று தெரிவித்தார்.
ரியா சக்ரவர்த்தியிடம் மூன்று நாட்களாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.