வன்முறையை போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
New Delhi: கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக அரசுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு உறுப்பினர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை கடத்துவதற்கு முயற்சிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
அவர்கள் முதலில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருந்து பின்னர் எதிர்க்கட்சியான பாஜகவை ஆதரித்தவர்கள் ஆவர். இருவரும் பாஜக மூத்த தலைவர் அசோக்கின் சட்டசபைக்கு அருகேயுள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அங்கே சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் இரு சுயேச்சை எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்து கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு எதிராக பாஜக தொண்டர்கள் களத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மோதல் தொடர்பாக கட்சி தொண்டர்கள் 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பெங்களூருவில் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆளும் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.