This Article is From Mar 09, 2020

யெஸ் வங்கி நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை!

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், DHFL நிறுவனத்துக்கு யெஸ் வங்கியின் மூலம் மூவாயிரத்து 700 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, அந்நிறுவனத்திடம் இருந்து 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

யெஸ் வங்கி நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை!

தற்போது ராணா கபூர் அமலாக்கத்துறை கட்டுபாட்டில் இருக்கிறார்.

ஹைலைட்ஸ்

  • அமலாக்கத்துறை விசாரணையில் ராணா கபூர்
  • ராணா கபூருக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ சோதனை
  • DHFL நிறுவனத்துக்கு கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு
New Delhi:

மும்பையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் வீடு உட்பட, 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராணா கபூர் DHFL நிறுவனத்திடம் இருந்து 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, மும்பையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. 

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், DHFL நிறுவனத்துக்கு யெஸ் வங்கியின் மூலம் மூவாயிரத்து 700 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, அந்நிறுவனத்திடம் இருந்து 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் ராணா கபூரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் DHFL நிறுவனத்தின் உரிமையாளர் வதாவன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் ராணா கபூருக்கு சொந்தமான வீடு உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

DHFL நிறுவனத்தின் ரூ.3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை யெஸ் வங்கி வாங்கியதுடன். இதற்கு பிரதிபலனாக ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு சொந்தமான டொயிட் என்ற நிறுவனத்திற்கு ரூ.600 கோடியை DHFL நிறுவனம் கடனை வழங்கியது என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

யெஸ் வங்கியின் கட்டுபாட்டை தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துகொண்டது. தொடர்ந்து, யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க நிதி முதலீடு செய்யப்போவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், திவாலான DHFL உள்ளிட்ட நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியுள்ளது என்றார். தொடர்ந்து, யெஸ் வங்கியின் நிதி நெருக்கடிக்கு காரணமாக முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார். 

இதைத்தொடர்ரந்து, மும்பையில் உள்ள யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பிறகு சனிக்கிழமை அதிகாலை அவரை கைது செய்தது. சுமார் 4500 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

.