This Article is From Jul 09, 2018

வலுக்கும் மக்கள் போராட்டம் - தடுமாற்றத்தில் 8 வழிச்சாலை திட்டம்

இது மத்திய அரசு திட்டம் என்றும், அதற்கு என்னால் உதவி மட்டுமே செய்வதாகவும் தமிழக முதலமைச்சர் கூறுகிறார்

Salem and Tiruvannamalai:

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு தமிழகத்தில் மக்களின் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்த 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை மக்கள் ஏன எதிர்க்கின்றனர், என்று தெரிந்து கொள்ள நாங்கள் களவு ஆய்வு செய்தோம்.

இந்த திட்டத்துக்காக 6000 மரங்கள் வெட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இதை மறுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கிட்டத்தட்ட 3 லட்சம் மரங்களை இழக்க நேரிடும் என்றும், இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

மற்றொரு புறம், அரசு தங்களின் நிலத்துக்கு சந்தை மதிப்பில் நஷ்ட்ட ஈடு வழங்காமல், அரசு நிர்ணயித்துள்ள நில மதிப்பை விட நான்கு மடங்கு அதிக இழப்பீடு தருவதாக விவசாயிகள் கூறுகின்றன. 4 மடங்கு அதிகம் என்றாலும் இது சந்தை மதிப்பை விட குறைவு என்கின்றனர் விவசாயிகள்.

“ ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். ஆனால், சந்தை விலை ஒரு ஏக்கர் ஒரு லட்சம்” என்கிறார் ராபர்ட் என்கிற விவசாயி. அரசு சில இடங்களில் தற்போதுள்ள அரசு நில மதிப்பீட்டை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் நில அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்த 8 வழிச்சாலை, ஜருகுமலை, சேவராயன் மலை, கல்ராயன் மலை, ஜவ்வாது மலை, கவுத்திமலை, வேடியப்பன்மலை ஆகிய மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகள் வழியாக ஊடுருவிச் செல்கிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், திட்டத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள அவரிடம் பேசினோம். “ சாலை திட்டமிடப்பட்டுள்ள பாதையில் இருக்கும் மலைகளிலிருந்து, நூற்றுக்கணக்கான ஏரிகளும், நதிகளும் நீர் ஆதாரத்தை பெறுகின்றன. இந்த திட்டத்தால் இந்த முக்கியமான நீர் ஆதாரங்கள் அழிக்கப்படும். ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிடம் தண்ணீரை கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், நாம் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். “ என்கிறார் பியூஷ்.

இது மத்திய அரசு திட்டம் என்றும், அதற்கு என்னால் உதவி மட்டுமே செய்வதாகவும் தமிழக முதலமைச்சர் கூறுகிறார்.

மற்றொரு கண்ணோட்டமும் சமூக ஆர்வலர்களிடம், இருந்து வருகிறது. இந்த 8 வழிச்சாலை சென்னைக்கு 36 கிமீ வெளியே தான் தொடங்குகிறது. ஆனால் சென்னையில் இருக்கும் போக்குவாத்து நெரிசலால் ஏற்படும் கூடுதல் நேரத்தை இவர்கள் மறைத்து, மொத்த பயண நேரம் 3 நேரம் மட்டுமே என்று கூறுகின்றனர். இந்த திட்டத்துக்கு பதிலாக, தற்போதுள்ள சாலையை விரிவாக்கம் செய்யல்லாம் என்கின்றனர். “செங்கல்பட்டு - வண்டலூர் சாலை மிகவும் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் இடம். அங்கு தான் 8 வழிச்சாலை அவசியம் “ என்கிறார் பியூஷ்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே இந்த சாலை அமைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும், முதலமைச்சர் பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் “இத்திட்டம் தமிழ்நாடு வளர்ச்சி பெற உதவும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, இது போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்த பசுமை வழித்திட்டம் ஒட்டு மொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் தமிழக முதலமைச்சர்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் மக்களின் கடுமையான கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது இருக்கும் என்பது உறுதி.

.