Read in English
This Article is From Oct 13, 2018

ஊதியம் மறு சீரமைப்புக்கு கண்டனம் : பஞ்சாப் அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் தொகுதியான பாட்டியாலாவில் இந்த போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன

Advertisement
Education

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்

Chandigarh:

பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு அவர்களது பயிற்சிக் காலத்தின்போது, மாதம் ரூ. 15 ஆயிரம் மட்டும் வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாநில அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி ஏராளமான ஆசிரியர்கள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் தொகுதியான பாட்டியாலாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுக்விந்தர் சிங் அளித்த பேட்டியில், “ ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்க வகை செய்யும் உத்தரவு எங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அநீதி. நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரூ. 42,700-க்கு பணியாற்றி இருக்கிறோம். இப்போது இந்த தொகை வழங்கப்படாவிட்டால் எங்களது குடும்பத்தை நாங்கள் எப்படி காப்பாற்றுவோம் என்றார்.

இந்த போராட்டத்தில் தங்களது குழந்தைகளுடன் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெண் ஆசிரியர் ஒருவர் அளித்த பேட்டியில், நான் மாத தவணை இ.எம்.ஐ. மட்டும் ரூ. 21 ஆயிரம் கட்டுகிறேன். எனக்கு ரூ. 15 மட்டும் வழங்கினால் எப்படி குடும்பத்தை சமாளிக்க முடியும் என்றார்.
இதற்கிடையே 17 ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement