This Article is From May 26, 2020

மருத்துவ விடுப்புக்கு மறுப்பு: கொரோனாவால் ஊழியர் மரணம்? மருத்துவமனையில் போராட்டம்!

இதனிடையே, உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ விடுப்புக்கு மறுப்பு: கொரோனாவால் ஊழியர் மரணம்? மருத்துவமனையில் போராட்டம்!

Mumbai:

மும்பை கேஇஎம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியிலிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மருத்துவ ஊழியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊழியர் ஒருவருக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டதால், நான்கு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் உயிரிழந்தாரா என்பது அவரது சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னர் தெரிய வரும்.

இதனிடையே, உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்றிரவு முதல் அவரது உடல் மருத்துவமனையின் சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனை வளாகங்களில் ஸ்ட்ரெச்சர்களில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடுத்துரைத்தனர். 

சடலங்கள் மருத்துவமனையின் முதல் மாடிக்கு மாற்றப்பட்டதாகவும், அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஏனெனில் கிழ் மட்டத்தில் உள்ள சவக்கிடங்குக்கு நிரைந்ததால், இடமளிக்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

.