हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 11, 2019

கட்டண உயர்வைக் கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! போலீசாருடன் தள்ளுமுள்ளு!!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் விடுதி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் அமைப்புடன் எந்த ஆலோசனையும் கேட்காமல் முடிவெடுத்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் இன்று காலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அண்மையில் உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் மாமிதாலா ஜெகதீஷ் குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும், அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து, ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வாயிலில் இன்று காலை திடீரென நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (ஏ.ஐ.சி.டி.இ) துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் பங்கேற்க இருந்த அரங்கை நோக்கி மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதில், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அண்மையில் "போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஆடைக் குறியீடு கட்டுப்பாடுகள்" உள்ளிட்டவை வருத்தத்தை அளிப்பதாக கூறினர். தொடர்ந்து, பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, தான் போலீசார் அமைத்த தடுப்புகளை கடக்க முயன்றனர். 

Advertisement

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் விடுதி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் அமைப்புடன் எந்த ஆலோசனையும் கேட்காமல் முடிவெடுத்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர். 

இதுதொடர்பாக போராட்டத்திற்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் கூறும்போது, இந்த கட்டண உயர்வு என்பது மாணவர்களின் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் சமத்துவத்தின் கனவை நசுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது" என்று கூறுகின்றனர்.

Advertisement

இந்த கட்டண உயர்வு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை பாதிக்கும் என்றும், தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பணம் செலுத்த முடியாவிட்டால் அவர்களுக்கு கல்வி வழங்குவதை இது மறுக்கிறது" என்றும் ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement