This Article is From Jan 16, 2019

2 பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயற்சி; தொடரும் பதற்றம்!

Sabarimala Temple : சபரிமலையில் கோயிலில் தரிசனம் செய்ய இன்று காலை 2 பெண்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி போராட்டக்காரர்கள் வழிமறிப்பு செய்தனர்.

2 பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயற்சி; தொடரும் பதற்றம்!

சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • ஜனவரி 2ம் தேதி கனகதுர்கா ஐயப்ப தரிசனம் செய்தார்
  • சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது
  • வலதுசாரி அமைப்புகள் பெண்கள் நுழைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
Thiruvananthapuram:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இன்று காலை இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி போராட்டக்காரர்கள் வழிமறிப்பு செய்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

மேலும் படிக்க : சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தப் பெண்ணுக்குத் தொடரும் கொடுமை; மருத்துவமனையில் அனுமதியா!?

இரண்டு பெண்களையும் சபரிமலையில் பாதுகாப்புக்காக இருந்த போலீஸார், பத்திரமாக மீட்டுச் சென்றுள்ளனர். முன்னதாக, ‘நாங்கள் 41 நாள் விரதத்தை முறைப்படி கடைபிடித்து வந்துள்ளோம். ஐயப்பனை தரிசனம் செய்யாமல் போக மாட்டோம்' என்று அந்தப் பெண்கள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க : சபரிமலை விவகாரம்: சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடி!

“ஐயப்பன், கோயிலுக்குள்ளே தான் இருக்கிறார். அவர், பெண்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவர்கள் யார் எங்களைத் தடுப்பதற்கு?” என்று வழிமறிக்கப்பட்டு ஒரு பெண் கேள்வி எழுப்பியுள்ளார். 

சபரிமலையில் வலதுசாரி அமைப்புப் போராட்டங்களை ஊக்குவித்து வரும் செயற்பாட்டாளர் ராகுல் ஈஷ்வர், “இந்துக்களுக்கு மேலும் ஒரு வெற்றி. சில இடதுசாரி அமைப்பாளர்களுடன் இரண்டு பெண்கள் இன்று சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்றனர். இதற்கு எதிராக பக்தர்கள் கூடி போராடியுள்ளனர். இதனால், அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, ‘சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம்' என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்தப் பிறகு, இரண்டு இள வயதுப் பெண்கள் முதன்முறையாக கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதில் ஒரு பெண்ணின் மாமியார், அவரை அடித்துவிட்டார் எனவும் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் நமக்குத் தகவல் வந்தது. 

கனகதுர்கா என்ற அந்தப் பெண், கோயிலுக்குள் சென்று வந்த பின்னர், வலதுசாரி அமைப்பினர் அவருக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். அதையடுத்து அவர் கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். நேற்று காலைதான், கனகதுர்கா தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டுக்கு வந்த கனகதுர்காவை, அவரது மாமியார் தலையில் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது கனகதுர்கா, நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

.