This Article is From Jul 24, 2018

மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் சூடுபிடிக்கும் போராட்டம்!

மகாராஷ்டிராவில் உள்ள மராத்திய சமூக மக்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரப்பட்டு வருகிறது

ஹைலைட்ஸ்

  • மராத்திய கிராந்தி மோர்ச்சா, மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்புவிடுத்துள்ளது
  • காகாசாகப் ஷிண்டே, கோதாவரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்
  • பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது
Mumbai:

மகாராஷ்டிராவில் உள்ள மராத்திய சமூக மக்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரி, மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்கள் நடக்கும் சில இடங்களில் தற்போது வன்முறை வெடித்துள்ளன. அவுரங்காபாத்தில் நடந்த போராட்டத்தில், ஒரு நபர் திடீரென்று ஆற்றுக்குள் குதித்ததால் போராட்டத்தின் வீரியம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த இறப்பு குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ‘போராட்டத்தில் ஒருவர் இறந்தது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்கள் பொறுமை காக்க வேண்டும். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து தீவிரமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

10 ஃபேக்ட்ஸ்,

அவுரங்காபாத்தில் தீயணைப்பு வண்டி ஒன்றுக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஒஸ்மானாபாத்தில் அரசு அலுவலகங்களுக்கு முன்னர் டயர் கொளுத்தப்பட்டது. பர்பானி மாவட்டத்தில் ரயில்கள் முடக்கப்பட்டன. 

மராத்தா கிராந்தி மோர்சா என்ற அமைப்பு, நேற்று இறந்த 28 வயது விவசாயியின் விஷயத்தை அரசு அணுகும் விதத்துக்கு எதிர்ப்பு தெரித்து மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுதுள்ளது. மேலும், ஃபட்னாவிஸ் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

காகாசாகப் ஷிண்டே என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று கோதாவரி நதியில் குதித்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அருகில் இருந்தவர்கள். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டார். 

‘எங்கள் சமூக மக்களிடம் முதல்வர் ஃபட்னாவிஸ் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்’ என்று மராத்தா அமைப்புகள் தெரிவித்துள்ளது.

சில மராத்திய அமைப்புகள் மும்பைக்கு போராட்டத்தை எடுத்துச் செல்லவும் முடிவெடுத்துள்ளன.

மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பு, முதல்வர் எங்களிடம் மன்னிப்பு கேட்டயாக வேண்டும். இல்லையென்றால் பந்தராப்பூர் டவுனில் இருக்கும் கோயிலுக்கு அவர் செல்லும் போது வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோயிலுக்கு செல்லும் பயணத்தை முதல்வர் ரத்து செய்வதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தார். தொடர்ந்து மராத்திய அமைப்புகளிடமிருந்து மிரட்டல் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

கடந்த சில நாட்களில் போராட்டங்கள் புல்தானா, அகோலா, பரளி, வஷிம், மும்பை போன்ற இடங்களிலும் நடந்தன. 

மகாராஷ்டிராவில் 30 சதவிகிதம் பேர் மராத்தியர்கள் தான்

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மராத்திய அமைப்புகள் அவர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வந்திருக்கின்றனர். 

.