This Article is From Apr 16, 2020

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக; மு.க.ஸ்டாலின்

பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக; மு.க.ஸ்டாலின்

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக; மு.க.ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தேர்ச்சி அறிவிக்க வேண்டும்
  • அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5000

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்' காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தேர்ச்சி அறிவிப்பது, வங்கிக் கடன்களை ரத்து செய்வது, கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏப்.15 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடத்துவதாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காவல்துறை வாயிலாக அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டது. 

144 தடை உத்தரவு நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தெரிவித்து தடை விதித்தனர். திமுக இந்த விஷயத்தில் அரசியல் செய்ய விரும்பாததால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொலியில் மறுநாள் நடத்த முடிவு செய்தோம்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும், பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை எப்படியாவது தடுத்திட வேண்டும் என இந்த அரசு தடை உத்தரவு போட்டது. அதை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 48 மணிநேரத்துக்கு முன் தகவல் தெரிவிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 

.