Read in English
This Article is From Aug 30, 2018

‘சுங்கச் சாவடிகளில் விஐபி, நீதிபதிகளுக்கு தனி பாதை!’- உயர் நீதிமன்றம் உத்தரவு

சுங்கச் சாவடிகள் தொடர்பான பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.

Advertisement
இந்தியா
Chennai:

இந்தியா முழுவதும் இருக்கும் சுங்கச் சாவடிகளில் விஐபி-க்கள் மற்றும் நீதிபதிகளுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும். இதற்கான சுற்றறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நாட்டில் இருக்கும் அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகள் தொடர்பான பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை ஹூலுவாடி ரமேஷ் மற்றும் முரளிதரன் ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘சுங்கச் சாவடிகளில் விஐபி-க்கள் மற்றும் நீதிபதிகளின் வாகனங்களும் நிறுத்தப்படுவது மன வருத்தம் அளிக்கிறது. இப்படி நிறுத்தப்படுவதால் அவர்களும் 10 முதல் 15 நிமிடம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, விஐபி-க்கள் மற்றும் நீதிபதிகள் நிற்காமல் செல்லும் வகையில் நாட்டில் இருக்கும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் தனிப் பாதை ஏற்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என்று கூறி வழக்கை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement
Advertisement