மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும், மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்
New Delhi: நாட்டில் பொருளாதாரம் (Economy) மிகவும் மந்தமான நிலையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது, வங்கிகளின் நிலை எப்படி இருந்தது என்பது பற்றி பேசியுள்ளார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் (Manmohan Singh) பற்றி மட்டும் அல்லாமல், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் (Raghuram Rajan) குறித்தும் மிகவும் கறாரான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அமைச்சர் நிர்மலா.
“ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி கருத்து கூறி வருகிறார். நானும் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராகவும் இருந்தபோதுதான் இந்திய பொதுத் துறை வங்கிகள் மிகவும் சிரமப்பட்டன” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா.
2011 - 2012 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், பொதுத் துறை வங்கிகளில் Bad லோன்ஸ், 9,190 கோடி ரூபாயிலிருந்து, 2013-14 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 2.16 லட்சம் கோடியாக அதிகரித்ததாக ஆர்பிஐ சொல்கிறது. 2014 மே மாதம்தான் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது.
மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும், மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இருவரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அதிகமாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர் ராஜன், “நாட்டில் உள்ள அமைப்புகளுக்கு மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் என நினைக்கிறேன்.
ரகுராம் ராஜன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அதிகமாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை வாதம் பேசிக் கொண்டிருப்பது தேர்தல்களை வெல்வதற்கு சில காலம் வரை பயன்படலாம். ஆனால், அது இந்தியாவை ஒரு நிச்சயமற்ற இருளான பாதைக்கு அழைத்துச் செல்கிறது” என்று மோடி அரசை விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்துதான் நிர்மலா சீதாராமன், ரகுராம் ராஜனை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
With inputs from PTI