சரியாக 6 நாட்களுக்கு முன்னர்தான் மிஷன் சக்தியை இஸ்ரோ செயல்படுத்தியது
New Delhi: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று எமிசாட் (EMISAT) உட்பட 28 நானோ செயற்கைக்கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவியுள்ளது. எதிரிகளின் ரேடாரை கண்டுபிடிக்கும் நோக்கில் இன்றைக்கு ஏவப்படும் செயற்கைக்கோள் ஒன்று செயல்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக 6 நாட்களுக்கு முன்னர்தான் மிஷன் சக்தியை இஸ்ரோ செயல்படுத்தியது. எதிரி நாட்டின் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை மிஷன் சக்தி மூலம் செய்து காட்டியது இஸ்ரோ.
இன்று விண்ணில் செயற்கைக்கோகள்கள் செலுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தரப்பு, இன்றைக்கான ராக்கெட் லான்ச் கவுன்ட்-டவுன் ஞாயிற்றுக் கிழமை காலை 6:27 மணிக்கு ஆரம்பித்தது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 71வது லான்ச் இது.
முதன்முறையாக இந்த ராக்கெட் லான்சை மக்கள் பார்வையிட அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய லான்ச்சில் மிகவும் முக்கியமானது, 436 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள். இதன் மூலம் எதிரிகளின் ரேடார்களை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் எனப்படுகிறது. இதுவரை எதிரிகளின் ரேடார்களை கண்டறிய இந்தியா, விமானங்களையே பயன்படுத்தி வந்தது.
இன்றைய மிஷன் மூலம், இஸ்ரோ, விண்ணில் செலுத்திய ஏவுகணை, மூன்று வித்தியாச சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும். இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ‘இன்றைய மிஷன் இஸ்ரோவுக்கு மிகவும் சிறப்பு வாய்தது. மூன்று வித்தியாச சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும்' என்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் மிஷன் சக்தி மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஏசாட் ஏவுகணையால், விண்ணில் 300 துண்டுகளாக குப்பைகள் மிதப்பதாகவும், அதைத் தாண்டி இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி ஏவுகணை செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது. சிலர், பி.எஸ்.எல்.வி ராக்கெட், இந்த குப்பையில் மோதிக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சுகின்றனர்.