பப்ஜி கூறித்து வைரலான பிரதமரின் 'பப்ஜி' குறித்த பேச்சு!
ஹைலைட்ஸ்
- தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தம் குறித்து பிரதமர் மோடி பேசினார்
- பப்ஜி ஆன்லைன் விளையாட்டு, குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
- உங்கள் மகன் பப்ஜி ப்ளேயரா என மோடி கேட்டார்
New Delhi: இந்தியாவில் பிரபலமானது பப்ஜியும் மோடிஜியும். இன்று, தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தம் குறித்து பிரதமர் மோடி அவர்கள் பேசி வந்தார்.
அப்போது, ஒரு மாணவனின் தாயார், 'தன் மகன் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விட்டான்' என கூறினார். அதற்கு மோடி, 'உங்கள் மகன் பப்ஜி ப்ளேயரா' என கேட்டார். அதற்கு அரங்கமே ஆரவாரம் செய்தது.
மேலும் அவர், ‘தொழிற்நுட்பம் என்பது நம்மை விரிவுப்படுத்த வேண்டும். நம்மை அது சுருக்கி விட கூடாது. உங்கள் மகனுக்கு தொழிற்நுட்பத்தின் நன்மைகளை விளக்கி கூறுங்கள்' என்றார்.
‘தொழிற்நுட்பம் என்பது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உடன் தான் வருகிறது. எது நல்லது எது கெட்டது என்பதை விளக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். பிள்ளைகளுக்கு சமைக்கவும் உருவாக்கவும் கற்று கொடுங்கள். அது அவர்களை ப்ளே ஸ்டேசனில் இருந்து ப்ளேகரவுண்டுக்கு அழைத்து வரும்' என்றார்.
பிரபலமான பப்ஜி ஆன்லைன் விளையாட்டு, குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மிரிலும் இதனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.